

புதுடெல்லி,
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26917 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1975 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 5914 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 2918 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உள்ளது.