தெற்கு ஆசியாவில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு

பாகிஸ்தானில் 247 பேர் உள்பட தெற்கு ஆசியாவில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தெற்கு ஆசியாவில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு
Published on

புதுடெல்லி

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 247 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சிந்து மாகாணத்தில் 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, குடிமக்கள் அமைதியாக இருக்க வேண்டும், சோதனைக்காக அனைவரும் விரைந்து செல்ல வேண்டாம்.தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இதனால் கவலைப்படத் தேவையில்லை. இதை நாம் ஒரு தேசமாக எதிர்த்துப் போராடுவோம். மேலும் கடவுளுக்கு விருப்பமானவர்கள் நாம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

நாட்டின் கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க சோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை சீனா வழங்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு பயணம் செய்துள்ள குரேஷி தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோன தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அதிநவீன தனிமைப்படுத்தும் மையத்தை அமைப்பதற்கு பாகிஸ்தானுக்கு மானியமாக சீனா பணம் வழங்கும்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு சீனா தனது மருத்துவ நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் என கூறினார்.

கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டில் வசதி இல்லாத 270 பொது மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் திறனை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தானும் உலக வங்கியும் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வரை கடன்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது போல் பாகிஸ்தானுக்கு அடுத்த படியாக தெற்கு ஆசியாவில் இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ளன. தெற்காசியாவில் மொத்தம் 487 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் கொரோனா பாதிப்பு 43 ஆக உள்ளது. இதை தொடர்ந்து அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

தெற்காசியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் வருமாறு:-

பாகிஸ்தான் - 247

இந்தியா - 150

இலங்கை - 43

ஆப்கானிஸ்தான் - 22

மாலத்தீவுகள் - 13

வங்காள தேசம் - 10

நேபாளம் - 1

பூட்டான் - 1

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com