கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவு..!

கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரானா தொற்று அறிவிக்கப்பட்ட கடந்த ஆண்டு மார்ச்சில் இருந்து 9 மாதங்களுக்கு குழந்தை பிறப்பு மிக அதிகமாக இருந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தம்பதிகள் வீட்டிலேயே இருந்த காரணத்தால் இது இயல்பான விஷயம்தான்.

ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கதை வேறு மாதிரி இருக்கிறது. அம்மாநிலத்தின் பிறப்பு, இறப்பு தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள தகவல்படி, கேரளாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 37 ஆயிரத்து 138 குழந்தைகள் பிறந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலையில் 10 ஆயிரத்து 684 என்று குழந்தை பிறப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.

கேரளாவில் கடந்த ஆண்டு ஜனவரியில் 36 ஆயிரத்து 414 ஆக இருந்த குழந்தைப் பிறப்பு, இந்த ஆண்டு ஜனவரியில் 30 ஆயிரத்து 335 ஆக குறைந்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் குழந்தைப் பிறப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. நடப்பு ஆண்டின் செப்டம்பருடன் முடிந்த மாதங்களில் கேரளாவின் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை, பல ஆண்டுகளில் மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. குழந்தைகள் நிதியம், இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் 11.60 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com