மேற்கு வங்காளத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்: பாஜக அரசு உத்தரவு

மீறு பவர்களுக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்: பாஜக அரசு உத்தரவு
Published on

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல்-அமைச்சராக சுவேந்து அதி காரி பதவி ஏற்றுள்ளார். இதை தொடர்ந்து பசுவதை தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் புதிய சட்டத்தை பா.ஜனதா தலைமையிலான அரசாங்கம் அமலுக்கு கொண்டுவந்துள்ளது.இந்த அறிவிப்பின்படி எந்தவொரு விலங்கும் முறையான ஆவணம் இல்லாமல் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப் பட்டுள்ளது.

14 வயதான விலங்குகள், வயது முதிர்வு, பிறவி ஊனம் மற்றும் தீராத நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள் ளான விலங்குகளை தவிர, எந்தவொரு விலங்கும் வெட்டப்படு வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் பொதுவெளி யில் விலங்குகளை வெட்டவும் தடை விதித்துள்ளது. இதை மீறு பவர்களுக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com