'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

கியூட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு 'கியூட்' என்னும் பல்கலைக்கழகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை பட்டப்படிப்புக்கான கியூட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது.

இந்தநிலையில் கியூட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நுழைவுத்தேர்வு மே மாதம் 15-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com