

டெல்லி,
தலைநகர் டெல்லியின் மெஹ்ருலி நகரில் சதுலாஜப் பகுதியில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இருந்தது.
இந்த கட்டிடத்தில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டிற்கான அலுவலகம், பயிற்சி மையம் போன்றவை செயல்பட்டு வந்தன.
இந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அடுக்குமாடி கட்டத்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் மேலும் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால், கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கட்டிட விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.