அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - எல்லைக்கு விரையும் கூடுதல் படைகள்

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - எல்லைக்கு விரையும் கூடுதல் படைகள்
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் உருவாகியது.

அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. அதேவேளை, எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, நேற்று இரவு முதல் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுகு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்தும், நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்தும் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் முப்படை தளபதிகளுடனான ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு 2 மணி நேரத்திற்குப் பிறகு தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை தலைவர் அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப் படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. சிங் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுடனான சமீபத்திய நிலைமை குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விளக்கம் அளித்தார். அவரைத்தொடர்ந்து விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங் விமானப்படை எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் போர் பதற்றம் எற்பட்டுள்ள சூழலில் முதல்முறையாக கூடுதல் படைகள் எல்லைகளுக்கு விரைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com