ராஜ்நாத்சிங் குணம் அடைந்து வருவதாக அதிகாரிகள் தகவல்

கொரோனா பாதித்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் குணம் அடைந்து வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜ்நாத்சிங் குணம் அடைந்து வருவதாக அதிகாரிகள் தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொற்று சாதாரண மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், சினிமா-விளையாட்டு துறையினர், நீதிபதிகள் என எந்த துறையையும் விட்டு வைக்கவில்லை. பல பிரபலங்கள் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

அந்தவகையில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள்தான் உள்ளன. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதுடன், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், கொரோனா பாதித்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நன்கு குணம் அடைந்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com