டெல்லியில் ஓலா, உபர் டாக்சிகள் ஓடாததால் பொதுமக்கள் அவதி..!!

டெல்லியில் ஓலா, உபர் டாக்சிகள் ஓடாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வாகனங்களுக்கான எரிவாயு (சி.என்.ஜி.) விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அதற்கு மானியம் வழங்க வேண்டும், வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். அதேநேரம், ஓலா, உபர் ஆகிய செயலி சார்ந்த வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

இந்நிலையில், ஆட்டோ, மஞ்சள்-கருப்பு டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்து நேற்று ஆட்டோ, டாக்சிகளை இயக்கினர்.

இதனால் டெல்லி மக்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அதேநேரம், ஓலா, உபர் டாக்சிகள் நேற்று ஓடாததால் அவதிக்குள்ளாயினர். தேவைக்கேற்ப டாக்சி கிடைக்கவில்லை, கட்டணம் அதிகமாக உள்ளது என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

வேலைநிறுத்தத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறிய ஓலா, உபர் டாக்சி டிரைவர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டமும் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com