டெல்லியில் ராகுல் காந்தியை விமர்சித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் எங்கள் முதுகில் அமர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலின்
Published on

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் அடுத்த மாதம் தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில் தொகுதி மறு​வரையறை மற்​றும் பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோதா ஆகியவை மீண்​டும் தாக்​கல் செய்​யப்​படலாம் என கூறப்​படு​கிறது. இந்​நிலையில் டெல்லியில் இன்று இந்தியா கூட்​டணி கூட்​டம் நடைபெறுகிறது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

திமுக புறக்கணிப்பு

தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில் சமீபத்​தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்​தல்​களில் சில முக்​கிய கூட்​ட​ணிக் கட்​சிகள் பின்​னடைவை சந்​தித்​தன. இந்த பின்​னடைவு​கள் மற்​றும் கூட்​ட​ணிக்​குள் அதி​கரித்து வரும் மனக்​கசப்​பு​களுக்கு மத்​தி​யில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியதை கடுமையாக விமர்சித்த திமுக, இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

ராகுலை விமர்சித்து

இதனிடையே, ராகுல் காந்தியை விமர்சித்து டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்களில் உதயநிதி ஸ்டாலின்,மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் எங்கள் முதுகில் அமர்ந்து முன்னேறிக்கொண்டு இருந்தது . அதன்பிறகு எங்கள் முதுகில் குத்தியது என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com