டெல்லி கட்டிட விபத்து: விடுதி உரிமையாளர் ராஜஸ்தானில் கைது

கட்டிட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி கட்டிட விபத்து: விடுதி உரிமையாளர் ராஜஸ்தானில் கைது
Published on

டெல்லி,

டெல்லியில் நடந்த கட்டிட விபத்தில் விடுதி உரிமையாளர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டிட விபத்து

தலைநகர் டெல்லியின் தெற்கில் அமைந்துள்ள சத்யா நிகேதன் பகுதியில் தங்கும் விடுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன. அந்த வகையில் நானக்புரா குருத்வாரா அருகே செயல்பட்டு வந்த தங்கும் விடுதியில் ஏராளமான மாணவர்கள் வசித்து வந்தனர். இதனிடையே, இந்த விடுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

உரிமையாளர் கைது

இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேவேளை, இந்த கட்டிட விபத்தை தொடர்ந்து அந்த விடுதியின் உரிமையாளர் ஹரிராம் தலைமறைவானார். இதையடுத்து, தலைமறைவான விடுதி உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்குப்பின் விடுதி உரிமையாளர் ஹரிராமை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிராம் டெல்லி அழைத்துவரப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com