டெல்லி தீ விபத்து: இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

புதுடெல்லி,

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. கட்டிடத்தில் இருந்து சுமார் 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், இது மிகவும் வருத்தமான சம்பவம். முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டு 8 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் (வெளி மாவட்டம்) சமீர் ஷர்மா கூறுகையில், இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளின்அடிப்படையில், முதல் தளத்திலிருந்தே தீ பரவியிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com