

புதுடெல்லி,
கைதிகள் மத்தியில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி 1,000 கைதிகள் ஜாமீனில் அனுப்பப்பட்டு உள்ளனர். 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் டெல்லி ஜெயில்களில் 19 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததால், கொரோனா பரவல் அதிகமாகவே இருந்து வந்தது. இவர்களில் 2,500 பேர் 45 வயதுக்கு மேற்பட்ட கைதிகளாவர்.
டெல்லியில் உள்ள 3 சிறைகளில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து இதுவரை 1,472 பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அடுத்தகட்டமாக 18-45 வயதுடைய கைதிகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக நேற்று தடுப்பூசி பணி தொடங்கப்பட்டு உள்ளது. திகாரில் நேற்று மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.