'டீப் பேக்' வீடியோக்கள் பரப்பப்படுவதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு - இன்று விசாரணை

தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
'டீப் பேக்' வீடியோக்கள் பரப்பப்படுவதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு - இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசும் 'டீப் பேக்' வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் மற்றொரு இந்தி நடிகரான ரன்வீர் சிங் பா.ஜனதா அரசை விமர்சித்து பேசும் 'டீப் பேக்' வீடியோவும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இரு நடிகர்களும் அளித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது 'டீப் பேக்' வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி வக்கீல்கள் அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி டெல்லி ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com