

புதுடெல்லி,
டெல்லி சமூகநலத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பாக மந்திரி ராஜ்குமார் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகம் தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை அலுவலகத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர் ஆக உள்ள நிலையில், டெல்லி மந்திரி ராஜ்குமார் ஆனந்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.