டெல்லி: 8-க்கும் மேற்பட்ட ஆடம்பர ரக கார்கள் திருட்டு; 7 பேர் கைது

டெல்லியில் கார்களை திருடி விட்டு பின்னர் அவற்றை, சம்பல், சிலிகுரி வழியாக வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை செய்து விடுவர்.
புதுடெல்லி,
டெல்லியில் வாகனங்களை திருடி வேறு மாநிலங்களில் விற்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சோனு, ரோகித், ராஜேந்தர், ஹாவோபிக், முகமது தில்தார், முகமது ஜானி மற்றும் அர்ஜுன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி டெல்லி குற்றப்பிரிவு காவல் ஆணையாளர் விக்ரம் சிங் கூறும்போது, இவர்களில் 3 பேரை ஒரு வழக்கிலும், 4 பேரை வேறு வழக்கிலும் கைது செய்துள்ளோம். 2 கும்பல்களாக அவர்கள் செயல்பட்டு வந்தனர். அவர்களிடம் இருந்து தார், இன்னோவா, பிரெஸ்ஸா மற்றும் மற்ற ரக கார்களை பறிமுதல் செய்துள்ளோம்.
அவர்கள் அனைத்து வகையான வாகனங்களையும் திருடியபோதும், தார் வகை கார்களையே அதிகம் திருடி சென்றுள்ளனர். டெல்லியில் கார்களை திருடி விட்டு பின்னர் அவற்றை, சம்பல், சிலிகுரி வழியாக வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை செய்து விடுவர்.
அவர்கள் மணிப்பூரிலேயே தங்களுடைய விற்பனை இலக்கை வைத்துள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரிக்க வேண்டி உள்ளது என அவர் கூறியுள்ளார்.






