கோலமாவு கோகிலா பட பாணியில்... குடும்பத்துடன் பல கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; டெல்லியில் அதிர்ச்சி

அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான மொத்தம் 2.25 கிலோ ஹெராயின், ரூ.73,400 பணம், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோலமாவு கோகிலா பட பாணியில்... குடும்பத்துடன் பல கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; டெல்லியில் அதிர்ச்சி
Published on: 

புதுடெல்லி

கோலமாவு கோகிலா பட பாணியில், டெல்லியில் குடும்பத்துடன் பல கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும் போதையில்லா இந்தியாவை உருவாக்கவும் டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிரடி சோதனையிலும் ஈடுபடுகின்றனர்.

தீவிர வேட்டை

இந்நிலையில் டெல்லி போலீசின் போதைப்பொருள் ஒழிப்பு படையினர் டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இதில், காவல் உதவி ஆய்வாளர் விபின் ரதி தலைமையில், சிக்னேச்சர் பிரிட்ஜ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, 2 மோட்டார் சைக்கிள்கள் அந்த வழியே வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹெராயின் பறிமுதல்

இதில், ரோகித் திவாகர், அவருடைய மனைவி மற்றும் சகோதரன் விஷால் திவாகர் என ஒரே குடும்பத்தின் 3 பேரும் பை ஒன்றில் போதைப்பொருiள மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதில், 2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர்.

போதைப்பொருள் ஒழிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்களுடன் தொடர்பில் இருந்த அப்ரோஜ் அலி, சிராக் மற்றும் கவுரவ் ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

பட பாணியில்

இவர்களில் விஷாலின் சகோதரன் அப்ரோஜ் அலி என்பதும் அலியின் மாமா இம்ரான் மற்றும் விஷால் இருவரும் போதைப்பொருள் வழக்கில் தேடப்படுபவர்கள் என்பதும் பின்னர் தெரிந்தது. ரோகித்தின் மனைவியின் தாய் மற்றும் சகோதரியும் போதைப்பொருள் வழக்கு ஒன்றில் குற்றவாளிகள் ஆவர்.

அலியிடம் இருந்து கவுரவ், போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. இதனால், ஒரே குடும்பத்தில் பலருக்கு போதைப்பொருள் கடத்தலுடன் உள்ள தொடர்பு பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான மொத்தம் 2.25 கிலோ ஹெராயின், ரூ.73,400 பணம், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டி மற்றும் 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோலமாவு கோகிலா என்ற தமிழ் பட பாணியில், டெல்லியில் குடும்பத்துடன் பல கோடி மதிப்பிலான ஹெராயின் வகை போதைப்பொருளை கடத்திய அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X