

டெல்லி,
தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், தலைநகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டெல்லியில் பதுங்கி இருந்த 9 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்ததும், டெல்லியில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.