சமூக சேவைக்காக மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசு தலைவர்

சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
சமூக சேவைக்காக மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
Published on

புது டெல்லி

நாட்டின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகளுக்காக, இந்த ஆண்டு மொத்தம் 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த குடியரசு தினத்திற்கு முந்தைய நாளில், இந்த விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இதில், இம்மாதம் 11ம் தேதி, முதல் கட்டமாக குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அன்று ஒரு பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

மற்றவர்களுக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று வழங்கப்பட்டன. மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.

இதேபோல, விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விண்வெளி ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ததாக நம்பிராஜன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உடைத்தெறியப்பட்டு அவர் அப்பழுக்கற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com