

புதுடெல்லி,
நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்தநிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, டெல்லியில் புதிதாக ஒரே நாளில் 1,295 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 19,844ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், புதிதாக பலியானோர் யாரும் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 8,478 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 10,983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.