டெல்லியில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லியில் இந்த ஆண்டின் அதிகபட்ச அளவாக இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டின் அதிகபட்ச அளவாக இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 6,52,742 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 10,978 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6,36,267 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,497 ஆக உயர்ந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com