டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

டெல்லியில் இன்று மேலும் 18,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 18,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,12,989 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 448 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,414 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 20,293 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,05,983 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 89,592 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com