டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 9,197 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 9,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 9,197 பேருக்கு தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 9,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,91,711 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 13.32 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 34 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,620 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,510 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 17,11845 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் தற்போது 54,246 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com