டெல்லியில் தினமும் 13 கார்கள் திருடு போகிறது - அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்

கோப்புப்படம்
இரவு ரோந்து பணி அதிகரிப்பால் கார் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி காவல்துறை தரவுகளின்படி 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை, டெல்லி முழுவதும் மொத்தம் 2,468 கார்கள் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. அதன்படி பார்த்தால் டெல்லியில் தினசரி சராசரியாக 13 கார்கள் திருடு போகிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 2 ,732 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைந்துள்ளது.
ஆட்டோ திருட்டுகளும் அதிகரித்து வந்ததால் போலீசார் சீருடையில் இல்லாமல் மப்டியில் கண்காணிப்பை பலப்படுத்தியதால் ஆட்டோ திருட்டுகள் குறைந்தன. இரவு ரோந்து பணி அதிகரிப்பால் கார் திருட்டும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






