டெல்லி: நாடாளுமன்றம் அருகே திடீர் தீ விபத்து

அந்த கட்டிடத்தில் பழுது நீக்கும் பணிகள் நடந்து வந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி, நாடாளுமன்றம்
Published on: 

புதுடெல்லி

டெல்லி நாடாளுமன்றம் அருகே மத்திய செயலகத்தின் வடக்கு பிளாக்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

டெல்லியில் நாடாளுமன்றம் அருகே மத்திய செயலகத்தின் வடக்கு பிளாக்கில் இன்று காலை 11.10 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

தீயணைப்பு வாகனங்கள்

இதுபற்றிய தகவல் அறிந்து டெல்லி தீயணைப்பு துறையை சேர்ந்த 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக புறப்பட்டு சென்றன. தீ மளமளவென எரிந்ததில் வான் வரை கரும்புகை பரவியது. இதனால், கட்டிடங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து விட்டனவா? என்ற தகவல் எதுவும் உடனே வெளிவரவில்லை.

அந்த கட்டிடத்தில் பழுது நீக்கும் பணிகள் நடந்து வந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா, நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இதனை பார்த்துள்ளார். அதுபற்றிய தகவலையும் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். எனினும், தீ விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com