டெல்லி கல்லூரியில் அசைவ உணவுக்கு தடை: மாணவர்கள் போராட்டம்

டெல்லி கல்லூரியில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லி கல்லூரியில் அசைவ உணவுக்கு தடை: மாணவர்கள் போராட்டம்
Published on

புதுடெல்லி,

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் ஹன்ஸ்ராஜ் கல்லூரி செயல்படுகிறது. இந்தநிலையில் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் கல்லூரி நிர்வாகம் அசைவ உணவுக்கு திடீர் தடைவிதித்தது.

இதனால் விடுதி உணவகம் மற்றும் கேண்டீனில் அசைவ உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது. அசைவ உணவுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பலமுறை மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தினர். இருப்பினும் தடையை நீக்க கல்லூரி நிர்வாகம் முன்வரவில்லை. ஷாருக்கான், அனுராக் கஷ்யப் ஆகியோர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com