டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை; உஷார் நிலையில் போலீசார்

டெல்லி மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள போலீசார் மீது, காலிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்த கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை; உஷார் நிலையில் போலீசார்
Published on

புதுடெல்லி

டெல்லி, உத்தராகண்ட் மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கும் வகையில், இ-மெயில்கள் வந்துள்ளன.

டெல்லி மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த கூடும் என எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில், இ-மெயில்கள் வந்துள்ளன. இதுபற்றி கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

வழிபாட்டு தலங்கள்

கோவில்கள், அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, டெல்லி போலீசார் உள்பட காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், வருகிற நாட்களில் மத வழிபாட்டு தலங்கள் உள்பட சில முக்கிய பகுதிகளின் மீதும், டெல்லி மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள போலீசார் மீதும், காலிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்த கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

பதற்ற நிலை

சமீபத்தில் உத்தராகண்ட் மாநில போலீசாருக்கும், நிஹாங் சீக்கியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலையால், இந்த பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனினும், இ-மெயிலுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com