கலவரத்தின் போது கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி உடலில் 250 இடங்களில் கத்திக்குத்து

கலவரத்தின் போது கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 250 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தின் போது கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி உடலில் 250 இடங்களில் கத்திக்குத்து
Published on

புதுடெல்லி,

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சந்த்பாக் என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். அவர்களில் அங்கித் சர்மா என்ற உளவுத்துறை அதிகாரியும் ஒருவர் ஆவார். அவரை ஒரு கும்பல் இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியது.

அங்கித் சர்மாவின் கதி என்ன ஆனது? என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், அவரது உடல் கைகள் கட்டப்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். அப்போது அவர் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கித் சர்மாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். அதில், அங்கித் சர்மாவின் உடலில் கழுத்து உள்பட சுமார் 250 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதாகவும், அவர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com