

புது டெல்லி,
தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தை நிர்ணயம் செய்யும் காற்று தரக் குறியீடு எண் மிகவும் மோசம் எனும் நிலைக்கு மாறியுள்ளது.
மத்திய அரசு அமைப்பான காற்றின் தரமும் வானிலை அறிக்கை மற்றும் ஆய்வு (எஸ் ஏ எப் ஏ ஆர்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காற்றின் தரம் இன்னும் மோசமடையும். எனினும், காற்றின் தரம் மிகவும் மோசம் எனும் நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் உள்ள துகள்களின் செறிவு 2.5 எனும் கணக்கில் உள்ளது.இதனால், காற்று தரக் குறியீடு எண் 252 எனும் கணக்கில் உள்ளது. இவற்றின் காரணமாக காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது.
அதே போல், காற்றில் உள்ள துகள்களின் செறிவு 10 எனும் கணக்கில் இருப்பதால், காற்று தரக் குறியீடு எண் 131 எனும் கணக்கில் உள்ளது. இதன் காரணமாக, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடிக்கிறது.
அதனால் டெல்லி, சிவப்பு மண்டலம் எனப்படும் அபாயகர நிலைமைக்கு சென்றுள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள பரிதாபாத், காசியாபாத் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களிலும் இதே நிலை தொடர்கிறது.
இந்நிலையில், டெல்லி நகரத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்க 24 மணி நேர கண்காணிப்பைக் கடைபிடிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று மிகவும் மோசம் எனும் தரத்தில் தான் காற்றின் தரம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
நாளையும் இதே நிலை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.