டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்கள் அவதி


டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Dec 2025 12:50 PM IST (Updated: 21 Dec 2025 4:36 PM IST)
t-max-icont-min-icon

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக காற்றின் தரம் மோசமாக நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடித்து வருகிறது.

டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் இந்த சூழ்நிலையிலும் காற்றின் தரம் மோசமாக நீடித்து வருகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று 386 (மிக மோசம்) என்ற நிலையில் உள்ளது இதனால், முதியோர், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story