டெல்லியின் லட்டுக்கு வெற்றி கிடைக்காது; வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மம்தா பானர்ஜி பேச்சு

வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பு வங்காள மக்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என மம்தா பானர்ஜி கூறினார்.
டெல்லியின் லட்டுக்கு வெற்றி கிடைக்காது; வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மம்தா பானர்ஜி பேச்சு
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும். இதன்படி 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, 144 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.

இந்த நிலையில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பவானிபூர் தொகுதியில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிடுவார்.

Also Read
291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ்; பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி
டெல்லியின் லட்டுக்கு வெற்றி கிடைக்காது; வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மம்தா பானர்ஜி பேச்சு

இதன்பின்னர் மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, 3 தொகுதிகள் கூட்டணி கட்சியான பாரதீய கோர்கா பிரஜாதந்த்ரீக் மோர்சாவுக்கு வழங்கப்பட்டு விட்டது என கூறினார். இதன்படி டார்ஜிலிங், குர்சியோங் மற்றும் காளிம்போங் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பு வங்காள மக்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ.க.வுக்கு இந்த முறை வாய்ப்பு கிடையாது. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த முறை உங்களுடைய வெற்றிக்கான தொகுதிகள் குறையும். வங்காளம் வெற்றி பெறும். டெல்லியின் லட்டுக்கு வெற்றி கிடைக்காது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com