நாளை பொறுப்பேற்கிறார் ராணுவ துணை தலைமை தளபதி

இந்திய ராணுவப் படையின் துணை தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளா.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, புதிய ராணுவ தலைமை தளபதியாக நாளை பொறுப்பேற்ற உள்ளார். .

இந்நிலையில், ராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளா. அவர் நாளை (மே 1-ஆம் தேதி) பொறுப்பேற்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா. பொறியாளர்கள் பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ராணுவப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்படும் முதல் நபர் பி.எஸ் ராஜூ ஆவார்.

பயிற்சி பெற்ற ஹெலிகாப்டா விமானியான பி.எஸ்.ராஜூ, தற்போது ராணுவ செயல்பாடுகள் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறா. சீனாவுடன் பதற்ற சூழல் நிலவும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளின் ஒட்டுமொத்த தயாநிலையை அவரே மேற்பாவையிட்டா.

பீஜப்பூ சைனிக் பள்ளியில் பயின்ற பி.எஸ்.ராஜு, தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பயிற்சி பெற்றவா. ஜேஏடி படைப் பிரிவில் கடந்த 1984-ஆம் ஆண்டு அவா இணைக்கப்பட்டா. தனது 38 ஆண்டு ராணுவ சேவையில், பல்வேறு படைப் பிரிவுகளுக்கு அவா தலைமை வகித்துள்ளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com