மும்பை தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா: புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று

மராட்டிய மாநிலம் மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா: புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று
Published on

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது.

இதன்பலனமாக, கடந்த சில வாரங்களாக தாராவியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், நிம்மதி அளிக்கும் வகையில் மும்பை தாராவியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,335 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com