

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கு தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாட்டிற்கு எதிராக 2 தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கேள்வி பதில் வடிவில், ஒரு அறிக்கை 35 பக்கஅறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:-
கேள்வி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறையில் 13 கோடி மக்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதா?
பதில்: இல்லை. 13 கோடி மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறுவது தவறானது. எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் முதலில் தயாரிக்கப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 13 கோடி பேர் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் அல்லது ஒன்றுக்கும் மேற் பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 2.8 கோடி பேர் இறந்தவர்கள், 3 கோடி பேர் கண்டுபிடிக்க முடியாதவர்கள்,6.3 கோடி பேர் நிரந்தரமாக இடம் மாறியவர்கள், சுமார் 1 கோடி பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் கொண்டவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த வரைவு பட்டியல் அரசியல் கட்சிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் வழங்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. தகுதியுள்ள வாக்காளர்கள் கோரிக்கை அல் லது ஆட்சேபனை தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வரைவு பட்டியலில் பெயர் குறிக்கப்படுவதும், இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.
புறக்கணிப்பு
கேள்வி: ஜென் இசட் எனப்படும் இளம் தலைமுறையினரின் வாக்குகளைப் புதிதாகச் சேர்ப்பதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா?
பதில்: இல்லை. 18 வயது நிறை வடைந்தவர்கள் அல்லது நிறைவு செய்யவிருப்பவர்கள், 4 தகுதித் தேதிகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கலாம். எஸ்.எஸ்.ஆர். அல்லது எஸ்.ஐ.ஆர். திருத்தத்துக்காக காத்திருக்காமல், படிவம் 6 மூலம் எந்த நேரத்திலும் பெயரைச் சேர்க்கலாம்.
கேள்வி: தேர்தல் ஆணையத்தில் முறைகேடு நடந்ததா? இரண்டு தேர்தல் ஆணையர்களையும் புறக்கணித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை எடுத்தாரா?
பதில்: இல்லை. தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் என 3 உறுப்பினர்களைக் கொண்டது. ஆணையத்தின் முடிவுகள் 3 ஆணையர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்படுகின்றன. வரைவு நிலையில் கருத்துகள் அல்லது கேள்விகள் எழுப்புவது வழக்கமான கலந்தாய்வு நடைமுறையாகும்.
வாக்குத் திருட்டு
கேள்வி: எஸ்.ஐ.ஆர்.என்பது "வாக்குத் திருட்டை” மேற்கொள்வதற்கான ஒரு வழி முறையா? "வாக்குத் திருட்டு" மூலம் பீகார், மேற்கு வங்கத் தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதா?
பதில்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்க்கின்றனர். அரசியல் கட்சிகளின் சுமார் 20 லட்சம் வாக் குச்சாவடி முகவர்களும் கண்காணிக்கின்றனர். கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்கும் வாய்ப்பு உள்ளது. வாக்குப்பதிவு, வாக்கு எண் ணிக்கை ஆகிய கட்டங்களிலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்காணிக்கின்ற னர்.
கேள்வி : "வாக்குத் திருட்டு" நடைபெறுவதற்கு வசதியாக, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் குழுவிலிருந்து சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி நீக்கப்பட்டாரா?
பதில்: இது தவறான குற்றச்சாட்டு. 2023 சட்டத்துக்கு முன்பு, மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமித்தார். பின்னர் பிரதமர், பிரதமரால் நியமிக்கப்பட்ட அமைச்சர், எதிர்க்கட் சித் தலைவர் இடம்பெறும் குழு மூலம் நியமனம் செய்யும் புதிய சட்டம் கொண் டுவரப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.