எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் பாசாங்கு காட்டும் பாகிஸ்தான்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தாங்களும் பலி பலியானதாக அறிக்கை வெளியிட்டதாக பாகிஸ்தான் காட்டும் பாசாங்கு
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் பாசாங்கு காட்டும் பாகிஸ்தான்
Published on

புதுடெல்லி:

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி), பாகிஸ்தான் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு அறிக்கையை அங்கீகரிக்க இந்தியா மறுத்துவிட்டது, பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் அந்த நாடு 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தாங்களும் பலி பலியானதாக பாசாங்கு காட்டியது.

பயங்கரவாதம் குறித்த அமர்வில் பாகிஸ்தான் தூதர் பேசவில்லை என்றாலும், அது பாதுகாப்பு கவுன்சிலைல் வழங்கப்பட்டதாக பாசாங்கு செய்தது.ஆனால் பாகிஸ்தான் மிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

இந்த அறிக்கையை ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் மிஷன் வெளியிட்டதுடன், அல்கொய்தா துணைக் கண்டத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டதாகக் கூறியது.

இந்த அறிக்கையை இந்தியா பாகிஸ்தானின் 'ஐந்து மிகப் பெரிய பொய்கள்' என்று கூறி கண்டனம் செய்ததோடு, அந்த அறிக்கை எப்படி, எங்கே வெளியிடப்பட்டது என்று கேள்வி எழுப்பியது.

பாகிஸ்தான் உறுப்பினராக இல்லாத போது அந்த அறிக்கையை வெளியிட்டது எப்படி எனவும் கேள்வி எழுப்பியது.

"இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், இந்தோனேசியா பாகிஸ்தானின் அறிக்கையை பதிவு செய்யாது என்று எங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்தது" என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ.க்கு இந்தோனேசியா யு.என்.எஸ்.சியின் தற்போதைய தலைவர் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானின் ஐந்து 'பெரிய பொய்களை' மீறி, இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் எவ்வாறு தூண்டுகிறது என்பதை இந்தியா பட்டியலிட்டிருந்தது.

பாகிஸ்தானின் ஐந்து பெரிய பொய்களை ஐ.நா.வில் அம்பலப்படுத்திய இந்தியா

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com