தண்ணீர் பிடிப்பதில் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொன்ற இளைஞர்

ஆத்திரமடைந்த அக்‌ஷய் ஜாதவ் கம்பியால் உமேஷ் வாகேயின் தலையில் பலமாக தாக்கினார்.
தண்ணீர் பிடிப்பதில் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொன்ற இளைஞர்
Published on

மும்பை,

தண்ணீர் பிடிப்பதில் எற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

மராட்டிய மாநிலம் டோம்பிவ்லி பகுதியை சேர்ந்தவர் அக்‌ஷய் ஜாதவ் (வயது 28). இவரது பக்கத்துவீட்டில் வசிப்பவர் உமேஷ் வாகே (வயது 34). இவர்களுக்கிடையே தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அக்‌ஷய் ஜாதவ் கம்பியால் உமேஷ் வாகேயின் தலையில் பலமாக தாக்கினார் இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த உமேஷ் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அக்‌ஷய் ஜாதவை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com