சாம்பியனான பெங்களூரு அணிக்கு டி.கே. சிவக்குமார் வாழ்த்து; வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க முதல்-மந்திரி வலியுறுத்தல்

வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள டி.கே. சிவக்குமார் தன்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
சாம்பியனான பெங்களூரு அணிக்கு டி.கே. சிவக்குமார் வாழ்த்து; வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க முதல்-மந்திரி வலியுறுத்தல்
Published on

பெங்களூரு

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெங்களூரு அணி, குஜராத்தை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள டி.கே. சிவக்குமார் தன்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், பெங்களூரு அணி மீண்டும் சாம்பியனாகி உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

ஐ.பி.எல்.லில் 2-வது முறையாக தொடர்ந்து பெங்களூரு அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. துணிச்சல், அமைதி மற்றும் தளராத மனவுறுதி என அந்த அணி பெங்களூருவை மீண்டும் பெருமையடைய செய்துள்ளது. அணியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் என பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, பெங்களூரு அணிக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து அவர், கர்நாடக போலீசார் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளனர். அணியின் வெற்றி கொண்டாட்டங்களின்போது, உங்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனிற்காக அவற்றை தவறாமல் கடைப்பிடியுங்கள். இந்த முறையும் கோப்பை நம்முடையதே என பதிவிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டும் பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பையை தட்டி சென்றது. அப்போது சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிலர் பலியானார்கள். இதனை முன்னிட்டு அரசு கடுமையான விதிகளை வெளியிட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com