டி.கே.சிவக்குமார் நாளை டெல்லி பயணம் - மத்திய மந்திரிகள், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களை சந்திக்கிறார்

டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களையும் டி.கே.சிவக்குமார் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.கே.சிவக்குமார் நாளை டெல்லி பயணம் - மத்திய மந்திரிகள், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களை சந்திக்கிறார்
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரிகளையும், சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக மாநிலத்தின் சார்பில் ஆஜராகும் வக்கீல்களையும் சந்தித்து பேச உள்ளார். இதற்காக நாளை அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, டி.கே.சிவகுமார் நாளை(27-ந்தேதி) காலை 9.55 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றடைவார் என்றும், டெல்லியில் நடைபெறும் சந்திப்புகளை நிறைவு செய்துவிட்டு நாளை இரவே பெங்களூரு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பயணத் திட்டத்தில் மத்திய மந்திரிகள் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் உடனான சந்திப்புகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தாலும், டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களையும் டி.கே.சிவக்குமார் சந்திக்க வாய்ப்பு உள்ளது என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி.கே.சிவக்குமார் தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் பெண்கள் யாரும் இல்லாத நிலையில், காலியாக உள்ள இடத்திற்கு ஒரு பெண் மந்திரியை நியமிக்க வேண்டும் என சிவகுமாருக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

அதோடு, மந்திரிசபையில் ஓரிரு மந்திரிகளை மாற்றிவிட்டு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலான சிறிய அளவிலான மந்திரிசபை மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் டி.கே.சிவகுமார் நாளை ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com