இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் தெரியுமா....?

அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை​ கடுமை​யாக உயர்ந்து வரு​வதால் பொது​மக்​கள் பெரிதும் பாதிக்கப்​பட்​டுள்​ளனர்.
இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் தெரியுமா....?
Published on

புதுடெல்லி,

மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் போர் சூழல் காரண​மாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் டேங்​கர் கப்​பல் போக்குவரத்தில் தடை ஏற்​பட்​டுள்​ளது. இதனால் சர்​வ​தேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்​தது. இதன் எதிரொலியாக இந்தியாவில் கடந்த 15-ம் தேதி முதல் பெட்​ரோல், டீசல் விலை உயர்ந்து வரு​கிறது. இதன் காரண​மாக அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை​யும் கடுமை​யாக உயர்ந்து வரு​வதால் பொது​மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

கடந்த 11 நாட்​களில் 5 முறை பெட்​ரோல், டீசல் விலை ஏற்​றம் கண்டுள்​ளது. நேற்​றும் நாடு முழு​வதும் பெட்​ரோல் 34 காசுகளும், டீசல் 23 காசுகளும் விலை உயர்ந்​தன. டெல்​லி​யில் பெட்ரோல் ரூ.102.12, டீசல் ரூ.95.20, மும்​பை​யில் பெட்​ரோல் ரூ.111.21, டீசல் ரூ.97.83, கொல்​கத்​தா​வில் பெட்​ரோல் ரூ.113.51, டீசல் ரூ.99.82 என விற்​பனை செய்​யப்​படு​கிறது. இந்த நகரங்களை விட சற்று அதி​க​மாக ஐத​ரா​பாத்​தில் பெட்​ரோல் ரூ.115.62, டீசல் ரூ.103.76-க்கு விற்​கப்​படு​கிறது.

இந்​த நிலை​யில் இந்தியாவிலேயே ஆந்​தி​ரா​வில் தான் பெட்​ரோல், டீசல் விலை மிக அதி​க​மாக உள்​ளது. விஜய​வா​டா​வில் பெட்​ரோல் ரூ.117.25, டீசல் ரூ.104.96 ஆகவும் விசாகப்​பட்டினத்​தில் பெட்​ரோல் ரூ.116.39, டீசல் ரூ.104.11 ஆகவும் உள்​ளது. அதேவேளை​யில் திருப்​ப​தி​யில் பெட்​ரோல் ரூ.117.88, டீசல் 105.49 என்ற விலை​யில் விற்​கப்​படு​கிறது. குறிப்பாக திருப்​பதி மாவட்​டத்​தில் தான்​ பெட்​ரோல்​, டீசல்​ விலை மிக​வும்​ அதி​க​மாக உள்​ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com