டோகாலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - ராஜ்நாத் சிங்

இந்தியா - சீனா இடையிலான டோகாலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும் என்றார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
டோகாலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி

இந்திய துருப்புகள் எல்லையை பாதுகாப்பதில் நன்கு பலம் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மத்தியில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். இந்தியா சீனா இடையே டோகாலாம் பகுதியில் தகராறு இருந்து வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா எந்த நாட்டின் மீதும் தீய கண்ணோட்டத்தை கொண்டிருந்ததில்லை என்று கூறிய ராஜ்நாத் இந்தியா தனது நிலப்பரப்பை விஸ்தரிப்பு செய்ய முயற்சித்ததில்லை என்றார். நாங்கள் எமது எல்லையை விரிவுபடுத்த எப்போதும் கருதவில்லை. அதே சமயம் நமது பாதுகாப்பு படைகள் எல்லையை பாதுகாக்கும் பலத்தை பெற்றுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை 3,488 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லையை பாதுகாக்கிறது என்றும் படையினரை பாராட்டி பேசினார் அவர். எவ்வளவோ கஷ்டங்கள் இருப்பினும் வீரர்கள் நாட்டைக் காக்கும் கடமையிலிருந்து விலகவில்லை என்று அவர் பாராட்டுதலில் குறிப்பிட்டார்.

மோடி வாஜ்பாய் வழியில் அண்டை நாடுகளுடன் நல்லுறவை வைத்திருக்கவே விரும்புகிறார் என்றார் அமைச்சர். வாஜ்பாய் நண்பர்கள் மாறாலாம்; அண்டை நாடுகள் மாற முடியாது. எனவே அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண வேண்டும் என்றார் ராஜ்நாத்.

எனவே அண்டை நாடுகளுடன் நல்லுறவு செய்தியை பகிர்ந்து கொண்டு, நம்மிடையே போராட்டாம் வேண்டாம், அமைதியே வேண்டும் என்று வேண்டுகிறேன் என்றார் அமைச்சர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com