

புதுடெல்லி,
டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தலைமை தாங்கி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், மத்திய மந்திரிகள் தங்களது உறவினர்களை அரசு பணியில் நியமிக்க கூடாது. அதிகாரிகளை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய மந்திரிகள் தினமும் அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்குள் வர வேண்டும். சிலர் இதனை கடைப்பிடிக்கிறார்கள். அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்த மத்திய மந்திரிகள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.