யார் மீதும் குற்றம் சொல்ல வேண்டாம், தவறு என் மீதுதான்: ஹமீது நிஹல் அன்சாரி

யார் மீதும் குற்றம் சொல்ல வேண்டாம், தவறு என் மீதுதான் என்று பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஹமீது நிஹல் அன்சாரி தெரிவித்தார்.
யார் மீதும் குற்றம் சொல்ல வேண்டாம், தவறு என் மீதுதான்: ஹமீது நிஹல் அன்சாரி
Published on

புதுடெல்லி,

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஹமித் நிஹல் அன்சாரி (33). இவர் சமூக வலைத்தளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி உள்ளார். அவரைப் பார்க்கும் ஆவலில் கடந்த 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்பேது அவர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாகிஸ்தானின் பேலி அடையாள அட்டை வைத்திருந்ததாகவும் உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த குற்றத்துக்காக இந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கடந்த 15-12-2015 அன்று அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அன்சாரியின் சிறை தண்டனை கடந்த 15-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, அன்சாரி நேற்று (செவ்வாய்) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர் வாகா - அட்டாரி எல்லையில் அன்சாரியை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து அன்சாரியும் அவரின் தாயும் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர்.

பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஹமீது நிஹால் அன்சாரி, தனக்கு நேர்ந்த துன்பத்துக்கு யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை எனவும், தவறு என் மீதுதான் எனவும் அதற்கான விலையையும் நான் கொடுத்துவிட்டேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com