'மோடி ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்குமா என்பது சந்தேகம்' - சஞ்சய் ராவத்

மோடி தலைமையிலான மத்திய அரசு 2026 வரை நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
'மோடி ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்குமா என்பது சந்தேகம்' - சஞ்சய் ராவத்
Published on

மும்பை,

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. இருப்பினும் கடந்த காலங்களில் இருந்ததை போல் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மோடி ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்குமா என்பது சந்தேகம் என சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2026-ம் ஆண்டு வரை நீடிக்குமா என்பது சந்தேகம்" என்றார்.

மேலும் மோடி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யமாட்டார் என்று குறிப்பிட்ட சஞ்சய் ராவத், ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் அது மராட்டிய மாநிலம் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com