4 மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை - மத்திய அரசு அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது.
4 மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை - மத்திய அரசு அறிவிப்பு
Published on

டெல்லி,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் போர் கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அன்றைய தினமே பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

போர் ஒத்திகையின்போது எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.

இந்நிலையில், 4 மாநிலங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

இந்த போர்க்கால ஒத்திகையின்போது கட்டுப்பாட்டு அறை, வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்படட் உள்ளது. மேலும், மக்களை எச்சரிக்கும் வகையிலான சைரன் ஒலி, தீயணைப்பு, மீட்புக்குழுவினரின் செயல்பாடுகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com