பாகிஸ்தானில் இருந்து ரூ. 10 கோடி போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன்

கவலின் அடிப்படையில் நேற்று இரவு எல்லைப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
பாகிஸ்தானில் இருந்து ரூ. 10 கோடி போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன்
Published on

சண்டிகர்,

பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் , ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதையும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களையும் தடுக்க சர்வதேச எல்லையில் பாதுகாப்புப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ. 50 கோடி போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பிஹனீர் மாவட்டம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு எல்லைப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்தது.

இதையடுத்து அந்த டிரோனை கைப்பற்றிய போலீசார், அதில் கொண்டு வரப்பட்ட ரூ. 50 கோடி மதிப்புள்ள 10 கிலோ போதைப்பொருள், 11 துப்பாக்கிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விரேந்திர சிங் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com