

மும்பை,
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏற வந்த பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரது உடைமைகளில் 5 கிலோ 'கெட்டமைன்' என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை கைது செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், அதிகாரிகள் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்தினர். அங்கிருந்து மேலும் 7 கிலோ 'கெட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன். இதேபோல போதைப்பொருள் கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ 'கெட்டமைன் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.36 கோடி ஆகும். மற்றொரு சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த 2 பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டதில் ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 6½ கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக 2 பயணிகளும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட னர். இதேபோல வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 443 கிராம் தங்கம் கடத்தி வந்த சம்பவத்தில் 4 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.