டெல்லியில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 4 பேர் கைது

. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.
டெல்லியில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 4 பேர் கைது
Published on: 

புதுடெல்லி,

டெல்லியில் பேகம்பூர் பகுதியில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. கடந்த மாதம் 16-ந் தேதி, அங்கு ஒரு சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 300 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், அதை வினியோகிக்க சென்ற லட்சுமண் ஹூடா என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில், லக்னோவில் சீதா காலனியில் இயங்கி வந்த சட்டவிரோத ஹெராயின் உற்பத்தி ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 6 கிலோ ஹெராயின் உள்பட 7 கிலோ ஹெராயின் மற்றும் மூலப்பொருட்கள் சிக்கின. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். 4 பேர் கைது செய்யப் பட்டனர்.

>

X

Daily Thanthi
www.dailythanthi.com