பின்லாந்து வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை


பின்லாந்து வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 31 Aug 2025 5:15 AM IST (Updated: 31 Aug 2025 5:15 AM IST)
t-max-icont-min-icon

எலினாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லி,

ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டும் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பின்லாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலினா வெல்டொன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

எலினாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, உக்ரைன் - ரஷியா போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

1 More update

Next Story