லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

முன்னதாக, டெல்லியில் இன்று காலை 8.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

லே லடாக் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11.51 மணியளவில் ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

171 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் இன்று காலை 8.44 மணியளவில் ரிக்டர் 2.8 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com