

புதுடெல்லி,
ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;-
ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித நாள் நம்பிக்கையையும் புதுப்பித்தலையும் கொண்டாடுகிறது. இது அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், ஒளியையும் கொண்டுவரட்டும். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவரையும் கருணையுடன் இருக்கத் தூண்டி, சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தட்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.